search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவ வழிபாடு சிறப்புகள் - 10
    X

    சிவ வழிபாடு சிறப்புகள் - 10

    • ‘நமச்சிவாயத்’ திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
    • சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.

    1. சிவன் பேயன் வாழையிலும், விஷ்ணு முகுந்தன் வாழையிலும், பிரம்மா-பூவன் வாழையிலும் குடி கொண்டிருப்பதாலேயே இந்த மூன்று வாழைப் பழங்களில் ஒன்றையாவது இறைவனுக்குப் படைக்க வேண்டும்.

    2. சிவத் தியானம் செய்யும் மகா வித்துவானான நந்தியே மகாதேவனைத் தரிசிக்க எனக்கு அனுமதி கொடு என்று கூறிக் கோவிலின் உள்ளே செல்லும்போத இரு கரங்களையும் மார்புக்கு நேராகக் குவித்து அஞ்சலி செய்து கொண்டே வலம் வருதல் வேண்டும்.

    3. சிவனுடைய கடைசி அம்சம் கால பைரவர் அதனாலேயே கோவில்களில் அர்த்த ஜாமம் முடியும் போது கடைசியாகப் பைரவர்க்குத் தீபாராதனை செய்கின்றனர்.

    4. 'நமச்சிவாயத்' திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.

    5. சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.

    6. பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் செய்ய வேண்டும். சிவாலயங்களில் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும்.பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும். மாலையில் வலம் வந்தால் பாவங்கள் அகலும் அர்த்த சமாத்தில் வலம் வந்தால் மோட்ச சித்தி உண்டாகும்

    7. பிரதோச விழாவின் போது நந்தி தேவர் பக்கத்திலும் இறைவன் திருச்சந்நிதியிலும் நெய் விளக்கு வைக்க வேண்டும்.

    8. சிவன் என்னும் பெயர் திராவிட மொழிச் சொல். இது பிற்காலத்தில் வடமொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    9. மாதப் பிறப்பு சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி, திங்கள் ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கக் கூடாது.

    10. சங்க இலக்கிய காலத்திலும் சிலப்பதிகார காலத்திலும் சிவாலயங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

    Next Story
    ×