என் மலர்
ஆன்மிகம்
X
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல விழா தேர்பவனி திரளானோர் பங்கேற்பு
Byமாலை மலர்15 May 2017 10:30 AM IST (Updated: 15 May 2017 10:30 AM IST)
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு பகலில் தேர்பவனியும், மாலையில் தேரில் திருப்பலியும் நடந்தன. திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் மரையுறை, ஜெபமாலை, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.
10-ம் நாள் விழாவான நேற்று காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், மலையாள திருப்பலியும் நடைபெற்றன. பகலில் தேர்பவனியும், மாலையில் தேரில் திருப்பலியும் நடந்தன. திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் ஜே.டி.கிளாட்சன், செயலாளர் டி.அலெக் சாண்டர், துணை செயலாளர் ஜிங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ், பங்குத்தந்தை ரால்ப் கிரான்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆன்றனி ரோசாரியோ மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Next Story
×
X