என் மலர்
ஆன்மிகம்
X
தவக்கால சிந்தனை : முதலில் உன்னைப்பார்
Byமாலை மலர்4 April 2019 10:25 AM IST (Updated: 4 April 2019 10:25 AM IST)
கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவரோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை.
தவக்கால சிந்தனை : முதலில் உன்னைப்பார்
“என் சொந்த திராட்ச தோட்டத்தையோ நான் காக்க வில்லை - உன்னதப்பாட்டு 1:6”
இரண்டு பெண்கள் பதநீர் பானைகளை சுமந்த படி சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒருத்தியின் கால் எங்கோ இடற தலையில் இருந்த பானை சாய்ந்தது. அதற்குள் மற்றவள் அது விழுந்து விடாதபடி கைகளால் தாங்க சென்ற போது அந்த பானையும் விழுந்து உடைந்தது. இவள் தலையில் இருந்த பானையும் விழுந்து உடைந்தது. மற்றவளின் பானையை விழுந்து விடாதபடி தடுக்கப்போனது நல்லதுதான் ஆனால் தன் தலையிலும் பானை இருப்பதை அவள் நினையாமல் போனதால் இரண்டும் நஷ்டம் அடைந்தது.
சில நேரங்களில் மற்றவர்கள் தவறக்கூடாது, தடம் புரளக்கூடாது, தகாத விதமாய் போய்விடக்கூடாது என்று அதிகமாக நாம் ஜாக்கிரதை பட்டு செயல்படுகிறோம். ஆனால் மற்றவர்கள் சரியாக இருக்கும் படி எதிர்பார்ப்போடு செயல்படுகிற நாம் சரியாக இருக்கிறோமா என்பதை கவனித்து செயல்பட மறந்து விடுகிறோம். உண்மை, நேர்மை, நாணயம், அன்பு, பரிசுத்தம், தாழ்மை, ஒழுக்கம் என்ற மற்றவர்கள் செவ்வையாய் இருக்கும் படி பிரசங்கிக்கும் எத்தனையோ இறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் அவைகளை தவறவிட்டு விட்ட சிறப்பற்றவர்களாய் நிற்பதை காண்கின்றோம். மற்றவர்கள் மனம் திரும்பவில்லையே என்று மார்பில் அடித்து கொள்கிற எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டதா என்ற சிந்திக்காமல் இருக்கின்றனர்.
சாலமோனுடைய நீதிமொழிகள் யாரையும் சிந்திக்கத்தூண்டும் தன்மையுள்ளவை. அவை மனிதன் எப்படி நடக்க வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள் எவ்விதம் இருந்தால் கடவுள் அவனை ஆசீர்வதிப்பார் என்ற தெளிவாக கூறுகின்றன.
ஆனால் கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவரோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை. அவர் மதியீனத்தை குறித்து பலரை எச்சரித்து கொள்டே மதியீமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். கடவுளுடைய வழிகளில் நடப்பதற்கு அனேகருக்கு தூண்டுதல்கள் கொடுத்த அவரோ ஒருநாள் தேனுடைய வழிகளை விட்டு விலகிப்போய் கடவுளால் வரும் மகிமையை இழந்து போனார். தங்களை எந்த விதத்திலும் செவ்வை படுத்தாத பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் அதிக அக்கரை கொண்டு அவர்கள் ஒழுக்காக இருக்கும்படி அதிக ஜாக்கிரதை காண்பிக்கிறார்கள். ஆனால் பயனில்லை. பெற்றோர் வழியோ பிள்ளைகளும் போகிறார்கள். ஆம் மற்றவர்கள் மேல் கரிசனை கொள்வது நல்லது. அதே வேளையில் நம்மை குறித்தும தேவையான அளவு கரிசனை வேண்டும்.
“உயர்ந்த கருத்துக்களை மனிதன் காதலிக்கிறான்.
கரம் பிடிக்க சொன்னாலோ நைசாக நழுவி விடுகிறான்”
சாம்சன்பால்.

Next Story
×
X