என் மலர்
ஆன்மிகம்
X
தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இன்று தங்கத்தேர் பவனி
Byமாலை மலர்14 Dec 2019 9:04 AM IST (Updated: 14 Dec 2019 9:04 AM IST)
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தங்கத் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திருப்பலி, செபமாலை நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார்.
விழா நாட்களில் திருப்பலி, இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி போன்றவை நடைபெற்றது.
9-ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனி நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனியும், 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது.

Next Story
×
X