என் மலர்
தோஷ பரிகாரங்கள்
தோஷங்கள் நீங்க அதியமான் கோட்டை பைரவருக்கு எந்த கிழமையில் என்ன பூஜை...
- 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
- 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..
திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு நந்தியா வட்டை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.
சகோதர ஒற்றுமை ஏற்பட:
செவ்வாய் கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம்பருப்பு பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர சகோதர ஒற்றுமை ஏற்படும்.
எதிர்ப்புகள் அகலவும், வெற்றிகள் குவியவும்:
செவ்வாய் கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சை பழம் மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த செங்கிழங்கு கலந்த பாயாசம், மாதுளம் பழம், ஜிலேபி அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.
கல்வியில் சிறந்து விளங்க:
புதன்கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசி பருப்பு பொடி கலந்த அன்னம், பாசி பருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
வியாபாரத்தில் வெற்றி வாகை சூட, புதிய தொழில் தொடங்க:
புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் அதியமான்கோட்டை கால பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து காசி சூட்டி புனுகு பூசி பாசிப்பயறு சுண்டல், பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.
தனப்ராப்தி ஏற்பட:
தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு செய்துவர தனப்ராப்தி ஏற்படும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட:
வியாழக்கிழமை நாளில் காலை 7:30 மணிக்குள் அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து முழு முந்திரி வித்து எனப்படும் முந்திரி கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கி யது போல காணப்படும். அந்த முந்திரி பருப்புடன் கூடிய முந்திரிக்கொட்டையில் மாலை அணிவித்தால் தான் முழு பலன் கிட்டும். புனுகு பூசி முந்திரி பருப்பு, கொண்டைக்கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கலைத்துறையில் சாதனை படைக்க:
வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைபொங்கல், சேமியாபாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..
நாகதோஷம் நீங்க:
வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் தட்சிண காசி காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்க பூமாலை அணிவித்து பால் சாதம், பால்பாயாசம் நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும். அருகே உள்ள பாம்பு புற்றில் ஒரு முட்டையை மேல் பகுதியில் லேசாக உடைத்து வைக்கவேண்டும்.
விஷபயம் நீங்க:
காசி கால பைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம்
சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சிண காசி காலபைரவருக்கு நாகலிங்கப் பூ மாலை அணிவித்து புனுகு பூசி எள் கலந்த சாதம், பால்பாயாசம், கருநிற திராட்சை நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்தால் விஷ பயம் நீங்கும்.
மேலும் பூஜைகள் பற்றிய விபரங்களை அறிய: கிருபாகரன் குருக்கள்: செல்-9443272066