search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஏழில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...
    X

    ஏழில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

    • ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
    • செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம்.

    ஏழில் செவ்வாய் தோஷம் உண்டா? என்ற விவாதம் எத்தனை நூறு ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராத விஷயம் என்பதால் நாம் அதைப் பற்றி பேச வேண்டாம். ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. செவ்வாயுடன் ராகு-கேதுகள் சம்மந்தம் பெறும் போது பிரச்சினை மிகுதியாக இருக்கிறது. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்க, முழுக்க தாய், தந்தை வழி கர்மாவை மிகுதியாக பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சினைகள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கிறது.

    காமம்

    மனிதர்கள் இல்லற இன்பத்தை வாழ்க்கைத் துணைவியிடம் மட்டுமே பெற வேண்டும். முறையற்ற காமத்தால்பொருள் விரயத்துடன் தீராத நோயும், சாபமும் வினைப்பதிவும் சேரும்.இதனால் பலரின் பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தம் இல்லாத நபர்களிடம் சிக்கி பயனற்றுப் போகிறது. பல குடும்பங்கள் பிரிந்து நிர்கதியாக வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

    காசு

    தன் விதிப்பயனையும் மீறிய பொருள் ஆசை அநீதியான வழியில் பொருள் ஈட்டும் உணர்வை தூண்டும்.காசு என்றால் பொருள் மட்டுமல்ல. பணம் சேர்க்க அநீதியை கடைபிடித்து ஒருவரை துன்புறுத்துவது.அடுத்தவரின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் போது உன் அடுத்த பிறவி உறுதியாகி சத்ருவும், கர்ம வினையும் மிகுதியாகும். அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ஒருரூபாய் இருந்தால் கூட அந்தக் கடனை கொடுத்து முடிக்கும் வரை மறு பிறவி எடுத்து வினையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கும் பணம், அடுத்தவரின் வயிற்றெரிச்சலில் ஈட்டிய பொருளால் வாங்கும் சொத்துக்கள்சந்ததிகளுக்கு பாவத்தையே மிகைப்படுத்துகிறது.

    சொத்து

    முறையற்ற குடும்பச் சொத்துப் பங்கீடு, அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும், வாரிசு இல்லாதவர்களிடம் விருப்பமின்றி பிடுங்கிய பிள்ளையில்லாச் சொத்தும் வாரிசுகளால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய வாரிசுகள் பல தலைமுறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள். முடிவில் சொத்து போன வழித்தடம் தெரியாது. ஆனால் பாவம் மட்டும் சரியான பாதை கண்டுபிடித்து வந்து வாசல் கதவை தட்டும்.

    பரிகாரம்

    தொடர்ந்து ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். 27 வாரம் செவ்வாய் கிழமை சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தந்து ஆசி பெற வேண்டும். ஏழு காவலர்களுக்கு ஏழு வாரம் தலா 1 கிலோ மாதுளை தானம் தர வேண்டும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பூமி தானம் செய்யலாம்.

    Next Story
    ×