என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் வழிபாடு
- பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும்.
- பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.
பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி புராணங்களில் சொல்லப்படுகிறது. பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் பிரம்மஹத்தி தோஷத்தை தரும். அதே போல திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
ஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும். புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.
திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மஹத்தி தோஷத்திக்கு பரிகாரம் என்றால் திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷ பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தலைமுறை சாபம் நீங்கி ஏற்றம் பெறலாம்.