என் மலர்
முக்கிய விரதங்கள்
இன்று சூரிய சஷ்டி... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...
- இன்று மாலை கோவில் சென்று சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம்.
- சூரியனை நோக்கியவாறு அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்.
இன்று (வெள்ளிக்கிழமை) சஷ்டி தினமாகும். இன்று மதியம் 12.03 மணி வரை சஷ்டி திதி உள்ளது. இந்த ஆவணி மாத சஷ்டியை சூரிய சஷ்டி என்று அழைக்கிறார்கள். இது மிகவும் சிறப்பான தினமாகும். எனவே சஷ்டி திதியான இன்று காலை சூரிய உதயத்துக்கு முன் குளித்து விட்டு விரதம் இருந்து சூரியனை நோக்கியவாறு அமர்ந்து கொண்டு வழிபட வேண்டும்.
அப்போது ஆதித்ய இருதயம் கோளாறு பதிப்பகம் போன்று சூரிய மந்திரங்களைச் சொல்லி 12 முறை சூரியனை நோக்கி வணங்கி பிரார்த்தித்து கொள்ள வேண்டும். முடிந்தால் பஞ்சகவ்யம் கலக்கி சாப்பிடலாம். இந்த வழிபாடு மன அமைதியை தரும்.
ஆவணி மாதம் வளர்பிறை சஷ்டி திதியான இன்று குமார தரிசனம் எனப்படும் நாள். ஆகவே இன்று விரதம் இருந்து மாலை குடும்பத்துடன் ஸ்ரீ முருகன் கோவில் சென்று சுப்பிரமணியரை தரிசனம் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைக்கும். அனைத்து நோய்களும் விலகி ஆரோக்கியமும் ஏற்படும் என்கிறார் திவோதாச மகரிஷி.