என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முக்கிய விரதங்கள்
![இன்று பீஷ்ம ஏகாதசி... விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால்.... இன்று பீஷ்ம ஏகாதசி... விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால்....](https://media.maalaimalar.com/h-upload/2023/02/01/1829476-bhishma-ekadashi.webp)
இன்று பீஷ்ம ஏகாதசி... விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால்....
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இன்று ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
- வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள்.
பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.ஒவ்வொரு மாதத்திலும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை இரண்டு திதிகள் வருவதுண்டு. அதாவது வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி திதி வரையிலும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலும் என இரண்டிரண்டு திதிகள் மாதந்தோறும் வருவது வழக்கம். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி முதல் சதுர்தசி வரையிலும் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலாபலன்களை நமக்கு வழங்கும்.
உத்தராயண காலத்தில் வரும் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த பருவத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மஹாபாரதப் போரில் பிதாமகர் என்றழைக்கப்பட்ட பீஷ்மருக்கு, உத்தராயண காலத்தின் முதல் அஷ்டமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அவருக்கு மோட்சம் அளித்தார். அதன் காரணமாகவே அந்த தினத்தை இந்துக்கள் அனைவரும் பீஷ்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.
பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்று பீஷ்மர் ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம்.
வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இந்த பீஷ்ம ஏகாதசி நாளாகும்.
பீஷ்ம ஏகாதசி தினத்தன்று (இன்று) பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.