என் மலர்
முக்கிய விரதங்கள்

வைகுண்ட ஏகாதசி விரதமும்... அனுஷ்டித்தால் தீரும் பிரச்சனைகளும்....

- திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
- பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும்.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசோசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளால் நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.