search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்கல் திருவிழா
    X
    பொங்கல் திருவிழா

    இந்த வார விசேஷங்கள் 14.1.2020 முதல் 20.1.2020 வரை

    ஜனவரி 14-ம் தேதியில் இருந்து ஜனவரி 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    14-ந்தேதி (செவ்வாய்) :

    * போகி பண்டிகை.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீப உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து, மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
    * கும்பகோணம் சாரங்கபாணி வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருவரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (புதன்) :

    * தைப் பொங்கல் பண்டிகை. (காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் பொங்கல் வைப்பது உகந்தது)
    * சகல சிவன் கோவில்களிலும் அயன தீர்த்தம்.
    * திருவையாறு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
    * திருவரங்கம் நம்பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் அயன தீர்த்தம், இரவு முத்து ரசப்படி புறப்பாடு.
    * சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (வியாழன்) :

    * மாட்டுப் பொங்கல்.
    * திருவள்ளுவர் தினம்.
    * மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் சுவாமி, பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
    * மருதமலை முருகப்பெருமான் ஆலயத்தில் படித் திருவிழா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளி, இரவு ஆண்டாள் சன்னிதியில் முத்துக்குறி கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (வெள்ளி) :


    * உழவா் திருநாள்.
    * திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் ஆகிய திருத்தலங்களில் பெருமாள், பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    * குச்சானூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி.
    * திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (திங்கள்) :

    * முகூா்த்த நாள்.
    * சுமார்த்த ஏகாதசி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×