என் மலர்
வழிபாடு
108-ன் தனிச்சிறப்பு
- பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
- பஞ்ச பூதத்தலங்கள், அறுபடை வீடுகள் என்பது போல வைணவ திவ்ய தேசங்கள் 108.
படைத்த கடவுளுக்கும், அவரது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது. பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்ற எண்ணைப் பயன்படுத்துகிறோம். அதற்கு இதோ ஒருசில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள் உள்ளன.
* பஞ்ச பூதத்தலங்கள், அறுபடை வீடுகள் என்பது போல வைணவ திவ்ய தேசங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108. அர்ச்சனையில் நாமங்கள் 108.
* சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு அதிகம்.
* முக்திநாத் திருத்தலத்தில் 108 நீரூற்றுக்கள் காணப்படுகின்றன.
* உத்தராகண்டில் உள்ள ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவ சன்னிதிகள் இருக்கின்றன.
* மனித மனதில் தோன்றும் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து 108 சக்தி நாடிகள், இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
* அரச மரத்தையும், பல தெய்வங்களையும் 108 முறை வலம் வருவது வழக்கமாகும்.