என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிகம்
![அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606030924358821_shiva-temple-prathosam-worship_SECVPF.gif)
X
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
By
மாலை மலர்3 Jun 2016 9:24 AM IST (Updated: 3 Jun 2016 9:24 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், அரிசி மாவு, விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல் பனங்கூர் கிராமத்தில் உள்ள காளகஸ்தி சமேத நானாம்பிகை கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டிமடம் விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோவில், மீன்சுருட்டி, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், ஆண்டிமடம் திருக்களத்தூர் திருக்கோடி வலத்தீஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி கோவில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ஆண்டிமடம், விளந்தை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, இடங்கண்ணி, தாதம் பேட்டை, கோடங்குடி, வாழைக்குறிச்சி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நாயகனைப்பிரியாள், கோடாலிகருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்து உள்ள வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வெங்கனூர், செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், குரூர், மாவலிங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த அபராதரட்சகர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி அபராதரட்சகர் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அருகில் உள்ள சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Next Story
×
X