என் மலர்
ஆன்மிகம்
மூலை அனுமாருக்கு நவதானியங்களால் அலங்காரம்
வைகாசி அமாவாசையை யொட்டி தஞ்சை மூலை அனுமாருக்கு நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார்கோவில் உள்ளது. இங்குள்ள மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிசேகம் நடைபெறுவது வழக்கம். மேலும் 18 அமாவாசைகள் மூலை அனுமாரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும் ஐதீகம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி அமாவாசையன்று அனுமாருக்கு கோதுமை, நெல், துவரை, பச்சைப்பயறு, கொண்டக்கடலை, மொச்சை, எள், உளுந்து ஆகிய நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். மேலும் வைகாசி அமாவாசையன்று ரிஷபம் ராசிக்காரர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாகும்.
அதன்படி நேற்று வைகாசி சிறப்பு அமாவாசையையொட்டி காலை 7.30 மணிக்கு லட்ச ராமஜெபம் நடைபெற்றது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிசேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலை அனுமாருக்கு நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கிரிவலம் போல் புகழ்பெற்ற அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனுமாருக்கு 1008 எலுமிச்சை பழங்களால் மாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story