என் மலர்
ஆன்மிகம்
X
வேதநாராயண பெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்
Byமாலை மலர்15 May 2017 11:04 AM IST (Updated: 15 May 2017 11:04 AM IST)
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவமும், வருகிற 17-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் பிரசித்தி பெற்ற வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகி தாயார் கோவில் உள்ளது. இங்கு, பெருமாள் நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால் தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார்.
பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பெருமாள் துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை நம்பிரான் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந்தேதி(புதன்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரி, கேடயம் சாற்றும் முறை, புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story
×
X