என் மலர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பலிபீடத்திற்கு திருமஞ்சன பூஜை
Byமாலை மலர்15 May 2017 1:14 PM IST (Updated: 15 May 2017 1:14 PM IST)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பலிபீடத்துக்கு திருமஞ்சன பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் மழை இல்லாததால் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற வறட்சி காலங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள பலி பீடத்திற்கு திருமஞ்சன பூஜை செய்தால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்திற்கு அருகே உள்ள பலிபீடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 7 நாட்கள் திருமஞ்சன பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்த பின் மழை பெய்தது. தற்போது கடும் வறட்சி நிலவுவதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள பலிபீடத்திற்கு நேற்று காலை திருமஞ்சன பூஜை நடைபெற்றது.
முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தங்க கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும் நீர், பால், தயிர், இளநீர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் புனித நீரால் பலி பீடம் மற்றும் கொடிமரத்திற்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அவற்றுக்கு புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.

Next Story
×
X