search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய்பாபா ஸ்லோகங்கள்
    X

    வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய்பாபா ஸ்லோகங்கள்

    சீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த ஸ்லோகங்களை வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

    சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

    1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
     
    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தன்னோ சாய் ப்ரசோதயாத்.
     
    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
     
    2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
     
    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி.
     
    3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
     
    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
     
    4. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:
     
    சாயிநாதர் திருவடி
     
    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே.
    Next Story
    ×