என் மலர்
ஆன்மிகம்
X
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்4 March 2019 10:36 AM IST
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம் இன்று நடக்கிறது
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், 187-வது அவதார திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அவதார திருநாள் ஊர்வலம் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மாளிகையில் இருந்து தொடங்குகிறது.
அப்போது 2குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச்செய்த அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து, அய்யா வழி பக்தர்கள் குடும்பத்துடன் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
இந்த ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜ தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்று மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைகிறது.
அதைதொடர்ந்து மதியம் 12 மணியளவில் பணிவிடை உச்சிப்படிப்பு, மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

Next Story
×
X