என் மலர்
ஆன்மிகம்
X
பெரிய காளியம்மன் கோவில் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
Byமாலை மலர்4 April 2019 12:14 PM IST (Updated: 4 April 2019 12:14 PM IST)
பெரியகாளியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
கொடைக்கானல் நகரில் டோபிகானல் பகுதியில், பெரியகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றம் மற்றும் சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 30 மற்றும் 31-ந் தேதிகளில் சுவாமி நகரில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து 1-ந் தேதி பூப்பல்லக்கில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம், சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று பொங்கல் வைத்தல், அன்னதானம் வழங்குதல் நடந்தது. இதைத்தொடர்ந்து தீச்சட்டி எடுத்து பக்தர்கள் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நாளான வருகிற 9-ந்தேதி மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் பகுதி இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

Next Story
×
X