என் மலர்
ஆன்மிகம்
X
திண்டல் சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Byமாலை மலர்4 April 2019 12:51 PM IST (Updated: 4 April 2019 12:51 PM IST)
திண்டல் சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு திண்டல் பெரியார் காலனியில் பிரசித்தி பெற்ற சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். 29-ந் தேதி விளக்கு பூஜை நடந்தது. 31-ந் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் இரவில் பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுபூஜை நடைபெறுகிறது.

Next Story
×
X