search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 8-ந்தேதி தொடங்குகிறது

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
    வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் 38-வது பிரம்மோற்சவ விழா 6-ந் தேதி கொடியேற்றுடன் தொடங்குகிறது. அதையொட்டி 6-ந் தேதி மாலை 6 மணிக்கு கிராமதேவதை செல்லியம்மன் உற்சவமும், 7-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவமும் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. மாலையில் அன்னவாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது.

    12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 13-ந்தேதி மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது. 14-ந்தேதி காலை 9 மணிக்குமேல் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-வது நாளான 17-ந் தேதி காலை 8.30 மணிக்குமேல் நடராஜர் அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது.

    17-ந் தேதி மாலை 3 மணிக்கு கொடியிறக்கமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 18-ந் தேதி காலையில் கோட்டையை சுற்றி சாமி வலம் வருதல், இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கிறது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவமும், 20-ந் தேதி மாலை 6 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தரும ஸ்தாபனம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×