என் மலர்
ஆன்மிகம்
X
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா
Byமாலை மலர்6 May 2019 12:03 PM IST
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரஞ்ஜோதி என்ற சிவபக்தர் தினமும் சிவனடியார்களுக்கு தனது வீட்டில் விருந்து அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருடைய பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் ஒரு நாள் சிவனடியார் (பிச்சாடனார்) வேடத்தில் விருந்து சாப்பிடுவதற்காக சென்று, தனக்கு ஒரு ஆண் குழந்தையை விருந்தாக படைக்க வேண்டும் என கேட்டார்.
அதன்படி பரஞ்ஜோதியும், அவருடைய மனைவியும் தங்களுடைய ஒரே மகனான சீராளனை கொன்று சமைத்து சிவனடியார் வேடத்தில் இருந்த சிவபெருமானுக்கு விருந்தாக்கினர். அப்போது சிவனடியார், உங்கள் மகனை விருந்து சாப்பிட அழைத்து வரும்படி பரஞ்ஜோதி மற்றும் அவருடைய மனைவியிடம் கூறினார்.
தங்கள் மகனை சமைத்து விருந்தாக்கிய நிலையில் அவனை எப்படி அழைத்து வருவது என்ற குழப்பத்தில் இருந்த பரஞ்ஜோதியும், அவருடைய மனைவியும் சிவனடியாரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வெளியே சென்று சீராளன் என அழைத்தனர்.
அப்போது அவர்களுடைய மகன் சீராளன் உயிருடன் ஓடி வந்தான். இதை சிவனடியாரிடம் சொல்வதற்காக பரஞ்ஜோதியும், அவருடைய மனைவியும் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது சிவனடியாரையும், விருந்துக்காக சமைக்கப்பட்ட உணவையும் காணவில்லை. இந்த நிலையில் சிவபெருமான், பார்வதி மற்றும் முருகப்பெருமானுடன் பரஞ்ஜோதிக்கு காட்சி அளித்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து பரஞ்ஜோதி என்ற சிவபக்தர் சிறுத்தொண்ட நாயனார் ஆனார். இதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி பிச்சாடனார் அலங்காரத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வீதியுலா நடைபெற்றது.
இதையடுத்து கோவில் தேரடியில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சிறுத்தொண்ட நாயனார் பிச்சாடனார் வேடத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு திருவமுது படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, செயல் அதிகாரி ரமேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story
×
X