என் மலர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளிய பெருமாள்
Byமாலை மலர்9 March 2020 9:28 AM IST (Updated: 9 March 2020 9:28 AM IST)
மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இன்று (திங்கட்கிழமை) காலை அன்பில் சென்றடைகிறார்.
மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவில் அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Next Story
×
X