என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிகம்
![ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்த காட்சி. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்த காட்சி.](https://img.maalaimalar.com/Articles/2020/Mar/202003091753271929_Tamil_News_Attukal-Bhagavathy-amman-pongla-vizha_SECVPF.gif)
X
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்த காட்சி.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பொங்கல் விழா
By
மாலை மலர்9 March 2020 1:26 PM IST (Updated: 9 March 2020 5:53 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டனர்.
கேரளாவின் திருவனந்த புரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பெண்களே பொங்கலிட்டு அம்மனை வழிபடும் நிகழ்ச்சி நடை பெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள். இதனால் இந்த பொங்காலை வழிபாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று நடந்தது. காலை 9.45 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் பூசாரி தீமூட்டி விழாவை தொடங்கி வைத்தார். கோவில் முன்புள்ள அடுப்பில் தீமூட்டப்பட்டதும், பக்தர்கள் அவரவர் அடுப்புகளில் தீமூட்டி பொங்கல் விட தொடங்கினர்.
கோவில் அமைந்துள்ள கிழக்கே கோட்டை முதல் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கில் பெண்கள் பொங்கலிட்டனர்.
பகல் 2.15 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி முடிந்து அம்ம னுக்கு பொங்கல் படைக்கப்படுகிறது. பின்னர் நைவேத்தியம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு தேவி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு பக்தர்கள் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவதோடு, விழா முடிவுக்கு வருகிறது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங் காலை விழாவில் ஏராளமான வெளிநாட்டு பெண் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக விழாவில் வெளி நாட்டு பெண் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளிலேயே பொங்கலிடும் படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
கேரளாவில் கொரோனா பரவி வருவதால் நோய் அறிகுறி உள்ளவர்கள், காய்ச்சல், சளித்தொல்லை, இருமல் இருப்பவர்கள் யாரும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும் பொங்காலை விழா நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் 200- க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story
×
X