என் மலர்
ஆன்மிகம்
X
எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும்?
Byமாலை மலர்17 April 2020 9:20 AM IST (Updated: 17 April 2020 9:20 AM IST)
நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’ என்றும், வீட்டுக்கு வரும் மருமகளை வாழ்வில் ‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம் தீபத்தின் பெருமையை அறியலாம்.
நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’ என்றும், வீட்டுக்கு வரும் மருமகளை வாழ்வில் ‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம் தீபத்தின் பெருமையை அறியலாம். வாழ்வில் ஒளி தந்து வளம் சேர்க்கும் தீபங்களின் சிறப்புகள் சிலவற்றை மேலும் பார்க்கலாம்.
எண்ணிக்கை
வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்குமே உண்டு. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பூஜையறை மட்டும் அல்லாது நிலைவாசலிலும் தொங்கு விளக்கு என்ற பெயரில் வெளியிலும் ஏற்றினார்கள். காரணம் அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் தொங்கு விளக்குகள் ஏற்றினார்கள். அடுத்து மாடம் இருக்கும். அதிலும் விளக்கு ஏற்றுவார்கள். இன்றைய நகரத்து வாழ்க்கையில் இத்தனை விளக்குகள் ஏற்றுவது சிரமம். நான் வீட்டு உயரத்தில் ஒரு பலகை வைத்து விளக்கு வைத்துள்ளேன். நிலைவாசலில் விளக்கு ஏற்றுவேன். வீட்டு பூஜையறையில் எப்போதுமே ஒரு காமாட்சி விளக்கு அணையா விளக்காக இருக்கும். நான் பூஜை செய்யும்போது தெற்கு தவிர மற்ற மூன்று திசைகளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவேன். அது பூஜை முடியும் வரை மட்டும் தான்.
முகங்கள்
சந்தோஷமான தருணங்களிலும், துக்க நேரங் களிலும் விளக்குகளை ஏற்றும் முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். அதன்படி விளக்கேற்றுவதற்க்கான நேரம், நோக்கம், திசைகள், முறைகள் போன்ற பல விஷயங்கள் தீபங்களில் அடங்கியுள்ளது . பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு என பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு அகல் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது. பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் நம்மால் ஏற்றி வைப்பது என்பது நடைமுறைக்கு வராத விஷயம். அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும். இவற்றிற்கான பலன்களை காண்போம். ஒரு முகம்- மத்திமம், இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை பெருகும், மூன்று முகம் - புத்திர இன்பம் கிடைக்கும், நான்கு முகம்- மாடு மனை வளம் சேரும், ஐந்து முகம் - செல்வம் செழிக்கும்.
ஆத்ம விளக்கு
பூஜையறையில் ஏற்றப்படும் விளக்கு தானாக குளிர்ந்தால் மிகவும் நல்லது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத பணிகளால் நாம் குளிர்விக்க வேண்டியுள்ளது. விளக்கை அணைப்பதாக சொல்ல கூடாது. குளிர்விப்பது என்றே சொல்லவேண்டும். பூஜையறையில் எத்தனை அடுக்குகளில் சுவாமி படங்கள் வைக்கிறோமோ அத்தனை அடுக்குகளுக்கும் தனி தனி விளக்குகள் வைக்கவேண்டும். காமாட்சி அம்மன் விளக்கை முக்கிய தெய்வங்களான சிவன், பெருமாள் போன்ற முக்கிய தெய்வங்களுக்கு வைக்கவேண்டும். எல்லா விளக்குகளை விட ஆத்ம விளக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது நமது பூஜையறையில் ஏதாவது ஓர் இடத்தில் பயன்படுத்த வேண்டும். விளக்கு வாங்கும்போது ஸ்டீல் விளக்கை வாங்கவேண்டாம். வெள்ளி அல்லது பித்தளை விளக்குகளை பயன்படுத்தவும். ஐம்பொன் விளக்காக இருந்தாலும் சிறப்பு.
குபேர விளக்கு
நெய் விளக்கு ஏற்றுவது நல்லது. எனவே நல்லெண்ணெய் விளக்கு ஏற்றினாலும் கூட ஒரு சொட்டு நெய்யாவது அதில் விடுங்கள். குத்து விளக்கில் எல்லா முகங்களையும் தினமும் ஏற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழும். பண்டிகை, விசேஷ தினங்களில் மட்டும் எல்லா முகங்களையும் ஏற்ற வேண்டும். மற்ற நாட்களில் ஒரு முகம் மட்டும் ஏற்றினால் கூட போதும். குபேர விளக்கு எப்போதும் குபேர சிலைக்கு அருகே மட்டும்தான் ஏற்றவேண்டும். குபேர விளக்கை சிலர் வீட்டு வாசலில் ஏற்றுகிறார்கள். அது தவறு. குபேரர் வீட்டுக்குள் வாசம் செய்யவேண்டும். எனவே வீட்டுக்குள் தான் வைக்கவேண்டும். நிலை வாசலில் நிலை வாசல் தேவதைக்காக ஒரு விளக்கை ஏற்றவேண்டும். நிலை வாசலில் இன்னொரு பக்கம் வேண்டுமானால் அகல் விளக்கு ஒன்றை ஏற்றலாம்.
தீப பூஜை
சாமி படத்திற்கு சின்னதாக விளக்கேற்றி சுலோகம் அல்லது கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். வீட்டில் அரை மணி நேரமாவது விளக்கேற்ற வேண்டும். தேவிகளின் சுலோகம், மந்திரம் அல்லது பாடல்களை ஒலிக்கவும் செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்தலாம். வியாபாரம் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும். பள்ளிமற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டில் அல்லது வியாபாரம் சம்மந்தமாக ஏதேனும் தொடங்கும் பொழுது குத்து விளக்கை ஏற்ற வேண்டும். சுபகாரியங்கள் செய்யும் பொழுது வெள்ளி, பித்தளை குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்து விளக்கை தவிர்த்திடுங்கள். குத்து விளக்கை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவார்கள். குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் தாமரை போன்று அகன்று இருப்பதை பிரம்ம அம்சம் என்றும் கூறுவார்கள்.
சுலோகம்
விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் விளக்கை ஊதி அணைப்பது தீமையைத் தரும். பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும். விளக்குகளை அமர்த்தும்போது ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று மனதில் தியானிப்பது நலம். விளக்குகளை வெறும் தரையில் வைப்பது நல்லதல்ல. பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது. தட்டுகளில் வைப்பது எண்ணெய் கீழே சிந்துவதை தடுக்கவும் செய்யும்.

Next Story
×
X