search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடியாத்தம் கெங்கையம்மன்
    X
    குடியாத்தம் கெங்கையம்மன்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

    ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். த
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவலால் கோவில் வளாகத்திலேயே அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவலால் நேற்று கோவில் வளாகத்திலேயே சமூக விலகலை பின்பற்றி பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கடந்த 2 ஆண்டுகளாக அம்மன் சிரசு ஊர்வலத்தை காணமுடியாத பக்தர்களின் வசதிக்காக கெங்கையம்மன் கோவிலில் சந்தனத்தால் கெங்கையம்மன் சிரசு அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதேபோல் கோவில் வளாகத்தில் மஞ்சள் நிற சேலையால் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல நாட்களுக்கு பிறகு கெங்கையம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளிைய கடைப்பிடித்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×