search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்று விழா நடந்த போது எடுத்தபடம்.
    X
    உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்று விழா நடந்த போது எடுத்தபடம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது

    10-ந்தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் பிரகார உலாவும் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    பின்னர் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு பராசக்தி அம்மனை கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பராசக்தி அம்மன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை படிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையின் காரணமாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆடிப்பூர கொடியேற்றம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் விநாயகர் உற்சவம் கோவிலில் பிரகார உலா நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உலா நடைபெற உள்ளது. இந்த விழா வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.

    10-ந்தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் பிரகார உலாவும் நடைபெற உள்ளது.

    வழக்கமாக விழாவின் இறுதி நாளன்று தீ மிதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×