search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    கே.என்.ஜி.புதூர் பிரிவில் வக்ர காளியம்மன் கோவிலில் நவசண்டி யாகம்

    கோவை கே.என்.ஜி.புதூர் பிரிவில் திரிநேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மகா நவசண்டி யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை கே.என்.ஜி.புதூர் பிரிவில் திரிநேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி உலக நன்மைக்காக 22-வது மகா நவசண்டி யாகம் நடைபெற்றது.

    இந்த விழாவை சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெற்ற நவசண்டி யாக விழாவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேள்வி பூஜைகளை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நேத்ர தசபுஜ வக்ர காளி அம்பாள் சேவா டிரஸ்ட் செய்திருந்தது
    Next Story
    ×