search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடமுழுக்கு நடந்ததையும், இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    குடமுழுக்கு நடந்ததையும், இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    மணலூர் மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் தரிசனம்

    மணலூர் மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை அருகே மணலூர் கிராமத்தில் பழமையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. மணலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராம மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக மகாமாரியம்மன் விளங்குகிறது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவு பெற்று, சிற்பங்களுக்கு வர்ணங்கள் தீட்டப்பட்டு நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

    விழாவையொட்டி கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்றது. அதையடுத்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள், வாண வெடிகள் முழங்க அய்யனார், திரவுபதி அம்மன், விநாயகர், பெருமாள் கோவில்களின் விமானம் மற்றும் மூலவர் குடமுழுக்கும், தொடர்ந்து மகா மாரியம்மன் விமானம், ராஜகோபுரம், மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது.

    இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மகாஅபிசேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    விழாவில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் துரை. சண்முகபிரபு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், பாபநாசம் ஒன்றியக்குழு துணை தலைவர் தியாகை. பழனிசாமி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கண்ணன், சதீஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜீவிதா ராஜசேகர், அன்பழகன், ஊராட்சி தலைவர்கள் வ.ஜெய்சங்கர் (கோவிந்தநாட்டுச்சேரி), பாண்டியன் (மணலூர்), முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயந்தி பாஸ்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×