என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![3 வடிவங்களாய் அருள்பாலிக்கும் வடிவேலன் 3 வடிவங்களாய் அருள்பாலிக்கும் வடிவேலன்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/28/1842459-palani.webp)
X
3 வடிவங்களாய் அருள்பாலிக்கும் வடிவேலன்
By
மாலை மலர்28 Feb 2023 11:27 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
- பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தமிழ்கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் தனிச்சிறப்பு. அந்த அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
பழனி என்றதும் நம் கண்முன் வருவது மலை மீது உள்ள கோவில்தான். ஆனால் பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மலைக்கோவிலில் தண்டாயுதபாணியாகவும், திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுதசுவாமியாகவும், ஊர்க்கோவிலில் (பெரியநாயகிஅம்மன் கோவில்) வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியாகவும் தனித்தனியே எழுந்தருளியுள்ளனர்.
இது பழனிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த 3 கோவில்களுக்கும் சென்று வணங்கி வருகின்றனர்.
Next Story
×
X