என் மலர்
வழிபாடு
சூரிய தோசம் நீங்க எளிமையான பரிகாரம்!
- அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
- மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.
உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். ஆதித்ய ஹிருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.
வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோவிலுக்குப் போவதும் நல்லது.
தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அன்றாடப் பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். மாதத்தில் ஒருநாள் நவக்கிரக சூரியனை தரிசித்து வழிபடுங்கள்.
மேற்கண்ட பரிகாரங்களுள் உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள். சூரியதோஷம் நிச்சயமாக உங்களை விட்டுப் போகும்.