என் மலர்
வழிபாடு
திருவண்ணாமலை கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
- இன்று மாலைபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
- இன்று இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இன்று மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இன்று முதல் 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்
10-வது நாள் கோவிலில் புனித தீர்த்தவாரி நடைபெறும்.
ஆடிப்பூர கொடியேற்று விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்திருந்தனர்.