search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரத்தியும்.. அறிவியலும்..
    X

    ஆரத்தியும்.. அறிவியலும்..

    • நாம் தினமும் ஆரத்தி எடுப்பது கிடையாது.
    • நாம் ஆரத்தி எடுப்பதன் பின்னணியில் அறிவியல் காரணம் இருக்கிறது.

    ஆரத்தி எடுக்கும் பழக்கம், நெடுங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. அதனை பலரும் திருஷ்டி கழிப்பதற்கான வழக்கம் என்றே கருதுகின்றனர். ஆனால் நாம் ஆரத்தி எடுப்பதன் பின்னணியில் அறிவியல் காரணமும் இருக்கிறது. நாம் தினமும் ஆரத்தி எடுப்பது கிடையாது. திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவித்து வரும் பெண், வெளியூர் பயணம் முடிந்து வருபவர் போன்ற ஒரு சிலவற்றுக்கே நாம் ஆரத்தி எடுக்கிறோம். இதற்கான அறிவியல் காரணம் பற்றி பார்ப்போம்.

    ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பர். அரைத்த மஞ்சளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். அதனை தாம்பாளத்தில் உள்ள தண்ணீருடன் சேர்த்து கரைக்க வேண்டும். இப்போது அந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். இப்போது அதன் மீது வெற்றிலை வைத்து, அதன் மேல் சூடம் வைத்து தீபம் ஏற்றுவர். இதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு இடமாகவும், வலமாகவும் மூன்று முறை சுற்றுவார்கள். இதனையே 'ஆரத்தி' என்கிறோம்.

    மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததுதான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நபர்கள், வெளியூர் பயணம் செய்து வருபவர்கள் மீது தொற்றுக்கிருமிகள் இருக்க வாய்ப்பு அதிகம். அவர்கள் அப்படியே வீட்டிற்குள் வரும்போது, அவர்களிடம் இருக்கும் தொற்றுக்கிருமிகள், வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்களை தொற்றி பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகையால் இதுபோன்று மஞ்சள் உள்ளிட்ட கிருமிநாசினி நீரை சூடேற்றி, உடலை சுற்றுவதால், அவர்களின் மேல் இருக்கும் கிருமிகள் அழியும் என்பது நம் முன்னோர்களின் அறிவார்ந்த கண்டுபிடிப்பு. அதனால்தான் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

    Next Story
    ×