என் மலர்
வழிபாடு
ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை
- தமிழகத்திலேயே மிகமிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவரங்கத்தில் தான் உள்ளது.
- உள்ளூர் பக்தர்களால் பெரிய பெருமாள் என இக்கடவுள் அழைக்கப்படுகிறார்.
ஆதிதிருவரங்கத்து அரங்கன் தமிழகத்திலேயே மிக நீளமான அரங்கர் என்கிறார்கள் - 28 அடி, திருவரங்கம் - 21 அடி, திருவட்டாறு - 22 அடி, சிங்கவரம் - 24 அடி, திருவனந்தபுரம் - 18 அடி தலை பின்னால் ஐந்து தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல்தர தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் வலது காலை தாங்குகிறார். இடையே தொப்பூழில் பூத்திருக்கும் தாமரை மீது அமர்ந்திருக்கும் நான்முகன். கீழே தலை அருகில் கருடாழ்வார். தெற்கு பக்கம் உள்ள தலையை கிழக்கு முகமாக திருப்பியுள்ள பெருமாள் வலது கையை தலைக்கு அடியில் வைத்து இடது கையை மடித்து கடக முத்திரை காட்டுகிறார் - பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் நிலை. வலது காலை மண்மகள் தொடை மீது வைத்துள்ளார். இரு தேவியருடன் போக சயனம். திருவரங்கத்தில் யோக சயனம்.
ஸ்ரீரங்கநாதரின் பெருமையைக் கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னதாகவே தோன்றிய சந்திர புஷ்கரணி என்னும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக இத்தலத்தில் விளங்குகிறது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் ஸ்ரீ ரங்க ரங்கநாதர் வழிபாட்டில் உள்ளார்.
நாட்டில் பெரிய பெருமாள் சிலை திருச்சியில் உள்ள ஸ்ரீரங்க ரங்கநாதர் சிலை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி திருவரங்கம் தலத்தில் மிகப்பிரம்மாண்டமாக 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இது "பூலோக வைகுண்டம்" என்றும் அழைக்கப்படுகிறது.
லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் தலமாகும். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனைப் போற்றி மங்களாசாசனம் செய்த தலமாகவும் இது விளங்குகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்பர் இராமாயணத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் என்பது மேலும் சிறப்புக்குரியது.
மேற்குறிப்பிட்ட தகவல்களை எல்லாம் கொண்டு பார்க்கையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதப் பெருமாளே நாட்டில் பெரிய பெருமாள் சிலை என நாம் எண்ணிவிடுகிறோம். ஆனால், அது உன்மையில்லை. தமிழகத்திலேயே மிகமிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவரங்கத்தில் தான் உள்ளது. நாட்டிலேயே பெரிய பெருமாளின் சிலை ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் உள்ளது என பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அதனைக் காட்டிலும் மிகமிகப் பெரிய பெருமாள் சிலை இத்தலத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. இதனாலேயே உள்ளூர் பக்தர்களால் பெரிய பெருமாள் என இக்கடவுள் அழைக்கப்படுகிறார்.
திருமாலின் திருவடிகளை தன் மடியில் பூமாதேவி மகிழ்ச்சியுடன் ஏந்திக் கொள்ள, வலப்புறம் கீழிருந்து கருடன் அடியவனாக ஏவல் புரியக் காத்திருக்க, ஆதிசேஷனாம் அரவணையின் மேல் அந்த அனந்தனே விரித்த படத்தால் குடைபிடிக்க, யோக நித்திரை புரிகிறான் ஆதித் திருவரங்கன். வலக்கை, சிரசின் பக்கமாக அபய முத்திரை அருள்கிறது. இடக்கை, நாபிக் கமலத்தில் உதித்தெழுந்த நான்முகனுக்கு நான் நான்மறைகளை நல் உபதேசம் செய்யும் ஞான முத்திரையைக் காட்டுகிறது.
பெருமாள் என்றாலே வைகுண்டம் தானே. அதற்கு ஏற்றவாறே வைகுண்ட ஏகாதசியன்று இத்தலத்தில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த நாட்களான புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பவுர்ணமி அன்றும் மூலவருக்கும், ரங்க நாயகி அம்மையாருக்கும் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.