என் மலர்
வழிபாடு
படைவீடும்.. பலன்களும்..
- முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் பிரசித்தி பெற்றவை.
- த ஆறு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஆறுவிதமான பலன்களைப் பெறலாம்.
முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஆறு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஆறுவிதமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள்.
தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருப்பரங்குன்றம் ஆலயத்தில் வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும்.
கடற்கரையோரமாக அமைந்த திருச்செந்தூரில் கடலில் நீராடி சுப்பிரமணியரை வழிபட்டால் நோய், பகை நீங்கும்.
முருகப்பெருமான் ஆண்டியாக நின்ற பழனி மலைக்கு சென்று வழிபாடு செய்தால், தெளிந்த ஞானத்தைப் பெறலாம்.
சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை முருகப்பெருமான் கூறிய இடம் சுவாமிமலை. இங்குள்ள முருகனை வழிபட்டால், மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தன்னுடைய கோபம் தணிவதற்காக முருகப்பெருமான் வந்து அமர்ந்த இடம், திருத்தணி. இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு கோபம் நீங்கி, வாழ்வு சிறக்கும்.
முருகப்பெருமான் தன்னுடைய திருவிளையாடலை, அவ்வையிடம் காட்டிய இடம் பழமுதிர்சோலை. இங்கு வழிபட்டால் பொன், பொருள் சேரும்.