என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் தரிசன கட்டணங்கள் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
- விஷேச நாட்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரபாடல் பெற்ற தலமாகவும் அவினாசி லிங்கேசுவரர் கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். விஷேச நாட்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய டிக்கெட் ரூ.2 என இருந்ததை தற்போது ரூ.5 எனவும், சிறப்பு வழி தரிசனத்திற்கு ரூ.10 ஆக இருந்த கட்டணத்தை ரூ.50 ஆகவும், அபிஷேகத்திற்கு ரூ.100-யில் இருந்து ரூ.250 ஆகவும், நவகிரக சாந்திக்கு ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் திருமண நிச்சயதார்த்த கட்டணம் ரூ.100 என இருந்ததை ரூ.500 ஆகவும், பரிகார பூஜைக்கு ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், திருமணத்துக்கு ரூ.1000 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியிடம் கேட்டபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அலுவலக தகவல் பலகையில் கட்டணம் உயர்வு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றார். இந்த கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.