என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் பல்லக்கு, கருட வாகனங்களில் உலா பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் பல்லக்கு, கருட வாகனங்களில் உலா](https://media.maalaimalar.com/h-upload/2023/06/05/1892861-bromatuc-5th.webp)
பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் பல்லக்கு, கருட வாகனங்களில் உலா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உற்சவர்களுக்குநறுமண திரவியத்தால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு பல்லக்கு வாகன வீதி உலா நடந்தது. பல்லக்கில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியத்தால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இரவு பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.