search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    `சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
    X

    `சிதம்பர ரகசியம்' என்றால் என்ன?

    • ஆகாயத்திற்கு உருவம் கிடையாது, எல்லையும் கிடையாது.
    • எந்தவிதமான குணமும் வாசனையும் கிடையாது.

    பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் 'ஆகாயம்' எனப்படும். ஆகாயத்திற்கு உருவம் கிடையாது, எல்லையும் கிடையாது. எந்தவிதமான குணமும் வாசனையும் கிடையாது. அதுபோலத்தான் பரம்பொருளும்.

    உருவம், எல்லை, வாசனை, குணம் என்று எதுவும் இல்லாதது-பரம்பொருள். அந்தப் பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கிறது. அதை உணர்த்துவதே 'சிதம்பர ரகசியம்'.

    தெரியாத ரகசியத்தை, எப்படித் தெரிந்தவர் மூலமாக அறிகிறோமோ; அதுபோல, பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் ரகசியத்தை, குரு நாதர் மூலம் அறிய வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம். சிதம்பரம் கோவிலின் அமைப்பே இந்த உண்மையை விளக்கும்.

    'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.

    Next Story
    ×