என் மலர்
வழிபாடு
கொட்டில்பாடு புனித அல்லேசியார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா நாளை தொடங்குகிறது
- விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 17-ந்தேதி புனித அல்லேசியார் தேர்பவனி நடைபெறுகிறது.
கொட்டில்பாடு புனித அல்லேசியார் புதிய ஆலயம் ஆர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு முட்டம் மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஸ்டேன்லி சகாய சீலன் தலைமையில் இனயம் பங்குதந்தை பபியான்ஸ் மறையுரையாற்றுகிறார். 8.30 மணிக்கு புதிய ஆலய வளாகத்தில் பால் காய்ச்சி அனைத்து அன்பியங்கள், திருவழிபாட்டு குழுவினர் சிறப்பிக்கின்றனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு தாய் பங்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து திருக்கொடி பவனி, மாலை 5 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருக்கொடிமரத்தை அர்ச்சித்து வைத்து திருவிழா கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் புதிய ஆலயத்தை அர்ச்சித்து வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு அன்பியங்களின் கலைவிழா ஆகியவை நடக்கிறது.
விழாவில் 16-ந்தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட அருட்தந்தை ஜெரேமியாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்தந்தை குணபால் மறையுரையாற்றுகிறார்.
17-ந்தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலியை கோட்டார் பங்குதந்தை பஸ்காலிஸ் நிறைவேற்றுகிறார். அருட்தந்தை ஜேசுதாஸ் மறையுரையாற்றுகிறார், மாலை 4.30 மணிக்கு புனித அல்லேசியார் தேர்பவனி நடைபெறுகிறது.
விழாவில் 22-ந்தேதி காலை 6.30 மணிக்கு அருட்தந்தை செல்வராஜ் தலைமை தாங்கி ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை ஜெல்பரின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு அருட்தந்தை டிசேல்ஸ் தலைமை தாங்கி மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். அருட்தந்தை ஜான்ரூபஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வானவேடிக்கை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவின் இறுதிநாளான 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி பாதுகாவலர் திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ராஜ் தலைமையில் ஆலய கட்டுமான குழு, நிதி திரட்டும் குழு, பங்குமக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.