என் மலர்
வழிபாடு
X
கார்த்திகைவடலி இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்14 Oct 2022 1:40 PM IST
- கொடை விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- ஞாயிற்றுக்கிழமை வில்லிசை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
நாகர்கோவில் அருகே உள்ள கார்த்திகைவடலி இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு திருவாதவூரர் திருவாசக முற்றோதுதல் பேரவை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறுசேமிப்பு பரிசு வழங்குதல், 8.30 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு வில்லிசை, 7 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு வில்லிசை ஆகியவையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவையும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
X