என் மலர்
வழிபாடு
மத ஒற்றுமை காக்கும் மகாமாரி
- மதநல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.
- மனிதன் தான் மதம் பார்த்து கடவுள்களை பிரித்து விடுகிறோம்.
எம்மதமும் சம்மதம் என்று அனைத்து மதங்களையும் இணைக்கும் மதநல்லிணக்கம் காக்கும் மகாதேவியாக கரூர் மாரியம்மன் விளங்கி வருகிறாள்.
இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று மதபே தங்கள் கரூர் மாரியம்மன் கோவிலை எப்போதுமே அண்டுவதில்லை என்கின்றனர் வரலாறு அறிந்த பெரியோர்கள்.
அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் மாரியம்மன் கோவில் வைகாசிப் பெருவிழாவில் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க என்றுமே தவறியதில்லை.
மாரியம்மன் கோவில் திருவிழா பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஷேக் முகமது என்ற முஸ்லிம் பெரியவர் முன்னின்று நடத்தி வைத் துள்ளதாக செய்திகள் கூறு கின்றன. அவருடைய மத நல்லிணக்க நடைமுறையை தலைமுறை, தலைமுறையாக அவரது குடும்பத்தினர் தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது அதன் தனிச் சிறப்பு. இதற்காக ஷேக் முகமது உறுதி ஆவணம் அளித்துள்ளதும் மிகச்சிறப்பு.
அதேபோல், கம்பம் ஆற்றுக்குச் செல்லும் போது கச்சேரி பிள்ளையார் கோயில் அருகில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து ஆண்டு தோறும் குளிர்பானம் வழங்குவதும் அனைவரும் கண்கூடாக பார்க்கும் மத நல்லிணக்கமாகும்.
அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும், அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கரூர் மாரியின் கோவிலில் நாம் அன்றாடம் கண் குளிர காணும் காட்சியாகும்.
மதங்களுக்கு அப்பாற்பட்டு மதநல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இதனால்தான் என்னவோ அனைத்து மதத்தினரும் கரூர் மாரியம்மனை சமகாலத்தில் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். இறைவன் எந்த காலத்திலும் தனது பக்தர்களின் குறைகளை போக்கும் வரத்தை மட்டுமே அருளுகிறார்.
மனிதன் தான் மதம் பார்த்து கடவுள்களை பிரித்து விடுகிறோம். கரூர் மாரியம்மன் தன்னை நாடி வரும் எந்த மதத்தை சேர்ந்த பக்தனாக இருந்தாலும் அவர்களின் மனக்குறையை போக்கி அவர்களின் வாழ் வில் மகிழ்ச்சியை மலர செய்து வருகிறாள் என்பதற்கு பக்தர்களின் மனச்சாட்சியே பதிலளிக்கும் என்பது நிதர்ச னமான உண்மை. ஓம் சக்தி, பராசக்தி என்று மனமுருகி வேண்டினாலே போதும்.