என் மலர்
வழிபாடு

X
கிருஷ்ணரின் மூன்று வளைவுகள்
By
மாலை மலர்28 Jun 2022 2:14 PM IST

- கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது.
- மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள்.
கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு 'திரிபங்கி லலிதாகரன்' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'உடலில் மூன்று வளைவுகளைக் கொண்டவன்' என்று பொருள்.
புல்லாங்குழல் ஊதியபடி கண்ணன் நிற்கும் தோற்றத்தை கண்டவர்கள், அதை நன்றாக பார்த்தால், இந்த மூன்று வளைவுகளைக் காண முடியும்.
இந்த கோலத்தில் ஒரு காலை நேராக வைத்து, மறு காலை மாற்றி வைத்திருப்பது ஒரு வளைவு. மற்றொரு வளைவாக கருதப்படுவது, அவரது வளைந்து நிற்கும் இடுப்பு. கழுத்தை சாய்த்தபடி கோவிந்தன் புல்லாங்குழல் ஊதுவது மூன்றாவது வளைவு.
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள். கண்ணனின் இந்த தோற்றத்தை வழிபடுபவர்கள், மேற்கண்ட மூன்றையும் அடைந்து இறுதியில், திருமாலின் திருவடியை அடைவார்கள்.
Next Story
×
X