என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/03/09/1846855-puthuru.webp)
அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியை படத்தில் காணலாம்.
புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பக்தர்கள் வீடுகள் தோறும் தேங்காய், பழம், பூ சாற்றி வழிபட்டனர்.
- அம்மனுக்கு சுத்தபூஜை நடந்தது.
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கோவிலில் காப்பு கட்டப்பட்டது. கடந்த 6-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு புத்தூர் மந்தைக்கு அம்மனை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் 5 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சுத்தபூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் ஓலைபிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தேங்காய், பழம், பூ சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதில் திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர்.