என் மலர்
வழிபாடு
மணலி அய்யா வழி கோவிலில் இன்று திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு
- இன்று மாலை 5 மணிக்கு திரு ஏடு வாசிப்பு தொடங்கும்.
- இரவு 10 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பதிவலம் வருவார்.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி யில் 10 நாள் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 9-ந்தேதி நடந்த 3-வது நாள் திருவிழாவில் அய்யா கருட வாகனத்தில் நகர்வலம் வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு திரு ஏடு வாசிப்பு தொடங்கும். இரவு 8 மணிக்கு திருக்கல்யாண சுருள் மற்றும் இனிப்பு பலகாரங்களோடு மக்கள் பதிவலம் வருவார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இருக்கிறார். இரவு 10 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பதிவலம் வருவார்.
16-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று பகல் 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் தேர்வீதி வலம் வருவார். இதில் புதுச்சேரி-தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்க உள்ளார்.