என் மலர்
வழிபாடு
ஆத்தூர் கீரிப்பட்டியில் 5 வயது சிறுவன் தலைமையில் நடந்த பிரமாண்டமான கோவில் தேரோட்டம்
- சிறுவனுக்கு வேஷ்டி-சட்டை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது.
- சிறுவனுக்கு வேஷ்டி-சட்டை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பகுதியில் மாரியம்மன், எல்லையம்மன் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்தது வந்தது. விழாவை முன்னிட்டு காலை 7 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.
தேரோட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இந்த நிலையில் திடீரென கோவில் நிர்வாகத்திற்கும், விழா குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி இருந்தது. இந்த கோவில் தேரோட்டத்தில் பாரம்பரியமாக ஊர் கவுண்டர் தர்மர் என்பவர் தேரில் அமர்ந்து அவர் தலைமையில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று ஊர் தர்மர் தேரில் அமரக்கூடாது என நீதிமன்ற உத்தரவை பெற்று வந்தனர். இதனால் தேரோட்டம் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது அதனை அடுத்து ஊர் பெரிய தனக்காரர்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் திரண்டு தர்மர் தேரில் அமர வேண்டாம். அதற்கு பதிலாக அவரது மகன் 5 வயது சிறுவன் ஜெயந்திர பிரதீப் தேரில் அமர்ந்து தேரை வழிநடத்துவார் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுவனுக்கு வேஷ்டி-சட்டை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது. பின்பு சிறுவனை தோளில் சுமந்து மேல தாளம் முழங்க ஊரை சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் சிறுவன் தேரில் அமர வைக்கப்பட்டான். இதையடுத்து காலை 7 மணிக்கு இழுக்க வேண்டிய தேரோட்டம் மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
சிறுவன் ஜெயேந்திர பிரதீப் தேரின் மேலிருந்து காவிநிற துண்டை அசைத்து வழிநடத்த கீழிருந்த பொதுமக்கள், ஊர் மக்கள், பக்தர்கள் அனைவரும் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 5 வயது சிறுவன் தலைமையில் நடந்த தேரோட்டம் பார்ப்பவரை மிகுந்த நெகிழ்ச்சியை உண்டாக்கியது.