search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாதேஸ்வரன் மலைக்கோவிலில் பெரிய தேரோட்டம் நடந்தது
    X

    பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    மாதேஸ்வரன் மலைக்கோவிலில் பெரிய தேரோட்டம் நடந்தது

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    • 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் யுகாதி, தசரா பண்டிகைகள் மற்றும் சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு யுகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் அமாவாசை உற்சவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் புலி, பசு, ருத்ர வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. மாலையில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. மேலும் சேலம் மாவட்ட அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று யுகாதி பண்டிகை கொண்டாட்டத்தால் மலை மாதேஸ்வரன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வெளி பிரகாரத்தில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. மாதேஸ்வர மலை சாலூர் மடாதிபதி சாந்த மல்லிகார்ஜுன் சாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் ரமேஷ், கோவில் செயலாளர் காத்யாயினி தேவி, துணை செயலாளர் பசுவராஜ், கோவில் கணக்கு மற்றும் ஆவணங்கள் மேற்பார்வையாளர் நாகேஷ், கோவில் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    கோவில் தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×