என் மலர்
வழிபாடு
X
திருப்பதியில் வார இறுதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Byமாலை மலர்27 Jun 2022 11:29 AM IST
- பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
- பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இலவச தரிசன வரிசையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை தரிசனத்துக்காக இரவு பகல் பாராமல் வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கின்றனர்.
மேலும் ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர்.
Next Story
×
X