என் மலர்
வழிபாடு

முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

- கொடை விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
- நாளை மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.
நெல்லை பேட்டை அருகே நடுக்கல்லூர் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23ந்தேதி வரை நடக்கிறது. நாளை இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.
நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக்கொடையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கிரகக்குடம் எடுத்து வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு அலங்கார பூஜையும், 10 மணிக்கு தீச்சட்டி எடுத்து வருதல், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து ஆயிரம் கண் பானை, பூ பெட்டி எடுத்து கோவில் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடுக்கல்லூர் விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.