என் மலர்
வழிபாடு

நாகநாதசாமி கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

- ராகு தோஷ நிவர்த்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது.
- இன்று இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாதசாமி கோவில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகவும். மேலும் 6 மங்கலங்களும் பொருந்திய தலமாகவும், ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அன்னவாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம், ஓலை சப்பரத்தில் ரிஷப வாகன பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கைலாச வாகனத்தில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தேரில் எழுந்தருளியிருந்த தியாகேசப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னா் தேரோட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நடராஜர் புறப்பாடு தீர்த்தம் கொடுத்தல், பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தீர்த்தம் கொடுத்தல், இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.