என் மலர்
வழிபாடு
X
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி -அம்பாள் வீதிஉலா
Byமாலை மலர்7 July 2022 8:21 AM IST
- இன்று (வியாழக்கிழமை) சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.
- வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-வது திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதிஉலா சென்றனர்.
இரவு வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா சென்றனர். மேலும் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 5-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.
மேலும் பக்தி இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கூட்டு வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.
Next Story
×
X